கோஸ்டா ரிகாவில் பூகம்பம்
Subscribe to Oneindia Tamil
சான் ஜோஸ்: கோஸ்டா ரிகாவில் பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.
மத்திய அமெரிக்கா நாடுகளில் ஒன்றான கோஸ்டா ரிகா, உலகின் முதல் ராணுவமற்ற நாடாக திகழ்கிறது. கடந்த ஜனவரி 8ம் தேதி இங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் சுமார் 20 பேர் பலியானார்கள். இதனால் சுமார் ரூ. 500 கோடி பொருள் இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அந்த நாட்டை நேற்று இரண்டு மாத காலத்துக்குள் இரண்டாவது முறையாக பூகம்பம் தாக்கியுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைநகர் சான் ஜோஸிலிருந்து சுமார் 175 கிமீ., தென் கிழக்கே உள்ள கடற்கரை நகரான கோல்பிடோவுக்கு அருகே 10 மீ., ஆழத்தில் நேற்று காலை 11.24 மணிக்கு பூகம்பம் நிகழ்ந்துள்ளது.
இந்த பூகம்பம் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உணரப்பட்டதாக அந்நாட்டு வானொலி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications