''அத்வானி பிரதமரானால் மாயாவதி துணை பிரதமர்''!
லக்னெள: மாயாவதி, அத்வானியின் மறுபக்கத்தை போன்றவர். இவர்கள் இருவருக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. அத்வானி பிரதமர் பதவிக்கு வந்தால் மாயாவதி துணைப் பிரதமராக செயல்படுவார் என சமாஜவாதி கட்சித் பொது செயலாளர் அமர் சிங் தெரிவித்துள்ளார்.
லக்னெளவில் நேற்று நடந்த கட்சி கூட்டத்தில் அமர் சிங் பேசுகையில்,
பாரதிய ஜனதாவின் மறுபக்கம் தான் பகுஜன் சமாஜ் கட்சி. இவர்களுக்கு இருவருக்கும் இடையே எந்த வேறுபாடும் கிடையாது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் பாஜக குத்தப்படுவதாக தான் இருக்கும். இரண்டு கட்சிக்கிடையேயும் ரகசிய ஒப்பந்தம் அமலில் இருக்கிறது.
உபியில் இதற்கு முன் மூன்று முறை முதலமைச்சராகப் பதவி ஏற்றார் மாயாவதி. மூன்று முறையுமே பாரதிய ஜனதாவின் உதவியால்தான் அவர் முதல்வர் ஆனார். பாரதிய ஜனதாவின் லால்ஜி டாண்டனைத்தான் மாயாவதி அண்ணனாகக் கருதுகிறார் என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம். எனவே அவர்கள் போட்டியாளர்கள் என்று கருதி ஏமாந்துவிட வேண்டாம்.
யானையும் தாமரையும் தனித்தனி சின்னங்கள் அல்ல. அவை இரண்டுமே நமக்கு எதிரானவை என்பதைத் தொண்டர்கள் மறந்துவிடக் கூடாது.
மாயாவதி மூன்றாவது அணியை ஆதரித்து அவர்கள் உதவியுடன் பிரதமராகி விட முடியும் என கனவு காண்கிறார். கட்சித் தொண்டர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதற்கே பணம் வாங்கியவர் மாயாவதி. அவர் அரசியலை ஒரு வியாபாரம் கருதுவதால் அவரது கனவு பலிக்காது என்றார் அமர்சிங்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications