தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வக்கீல்கள் கோரிக்கை
சென்னை: தமிழக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு 356 வக்கீல்கள் தந்தி அனுப்பியுள்ளனர்.
கடந்த 19ம் தேதி உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் தாக்கப்பட்டது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரி மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதால் மாநில அரசை 356வது பிரிவின் கீழ் கலைக்க வேண்டும் என்று கோரி 356 வழக்கறிஞர்கள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு தந்தி அனுப்பியுள்ளனர்.
கருணாநிதிக்குக் கண்டனம்:
இதற்கிடையே இன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்ட குழு தலைவரும், உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவருமான பால் கனகராஜ் கூறுகையில், வக்கீல்கள் போராட்டம் குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கருத்து கேட்க பட்டபோது, நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர் பிரச்சனையாக இது உருவாகி இருப்பதாக கருத்து கூறியுள்ளார்.
இது பிரச்சனையை திசை திருப்பும் முயற்சியாகும். போலீசாரை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறோம். நீதிபதிகளோடு எந்த பிரச்சனையும் இல்லை. இந்நிலையில் முதல்வர், நீதிபதி களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் பிரச்சனை என்று கூறி திசை திருப்ப முயன்றிருப்பது கண்டனத்திற்குரியது.
உயர்நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் வசதிக்காக இரண்டு சட்ட உதவி மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. வழக்குகள் தொடர்பான உதவிகளை பொதுமக்கள் இந்த மையங்களின் மூலம் பெறலாம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications