மேகலாயாவில் ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரை
டெல்லி: மேகலாயா அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையி்ல் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மாநில ஆளுநர் பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகிறது.
நேற்றுதான் மேகலாயா சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான மேகாலயா முற்போக்குக் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது.
ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய நான்கு சட்டசபை உறுப்பினர்களின் வாக்குகளை செல்லாது என்று சபாநாயகர் லனோங் அறிவித்தார். அரசுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்குகள் விழுந்த நிலையில் அரசுக்கு ஆதரவாக தனது வாக்கை செலுத்தி ஆட்சியைக் காப்பாற்றினார் சபாநாயகர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பி்ல மேகாலயா அரசு வெற்றி பெற்றது.
இது சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது. இதனால் மேகாலயா அரசியலில் பெரும் குழப்ப நிலை நீடித்து வந்தது.
இந்த நிலையில், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்யலாம் என்று பரிந்துரைத்து மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதினார் மாநில ஆளுநர் மூசாரே.
இதையடுத்து இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூடியது. மேகலாயாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைப்பது என அப்போது முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், மேகாலயா சட்டசபையில் நடந்தது குறித்து ஆளுநர் விரிவாக விளக்கி கடிதம் அனுப்பியுள்ளார். அங்கு அரசியல் சட்டம் சீர்குலைந்து விட்டதாகவும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறும் கோரியிருந்தார்.
இதை ஏற்று சட்டசபையை முடக்கி வைக்கவும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது என்றார் சிதம்பரம்.
இதையடுத்து இன்றைக்குள் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகனடப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications