வன்னி-தமிழர்களை வெளியேற்ற ரெட்கிராஸ் எதிர்ப்பு
டெல்லி: வன்னிப் பகுதியிலிருந்து தமிழர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எதிர்ப்பதாக இலங்கைக்கான செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பால் காஸ்டெல்லா கூறியுள்ளார்.
இதுகுறித்து என்டிடிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டி..
நான் 2008ம் ஆண்டு கொழும்பு சென்று தலைமைப் பொறுப்பை ஏற்றேன். மனிதாபிமான நெருக்கடியை சரி செய்வதே எனது முக்கிய வேலையாக இருந்தது. போர்ப் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களைக் காப்பாற்றுவது மிகப் பெரிய வேலையாக இருந்தது. 2வது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி அப்பாவி மக்களின் மருத்துவம் மற்றும் சுகாதாரத் தேவைகள் பாதிக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அங்கு போதிய அளவில் சுகாதார வசதிகள், உணவு போன்றவை கிடைக்காத நிலை உள்ளது.
தற்போது அங்குள்ள நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தாக்குதலில் சிக்கி ஏராளமான அப்பாவிகள் காயமடைந்து வருகின்றனர். பெருமளவில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இரு தரப்பும் அப்பாவி மக்களின் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் போரிட்டு வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் சிக்கியுள்ள மக்கள் பெரும் உயிரிழப்பை சந்திக்கும் அபாயத்தில் உள்ளனர்.
அரசு அமைத்துள்ள தற்காலிக அகதிகள் முகாம்களில் ஏராளமான பேர் தங்கியுள்ளனர். அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் வசதிகள் செய்து தரப்படுகின்றன. நிலைமை போகப் போக மேம்படும் என நம்புகிறோம்.
இதுவரை புலிகளின் பகுதிகளிலிருந்து 35 ஆயிரம் பேர் வரை அரசுத் தரப்பு பகுதிகளுக்கு வந்திருப்பதாக கருதுகிறோம்.
தமிழ் மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றும் முடிவை இலங்கை அரசு எடுத்திருப்பதாக அறிகிறோம். ஆனால் அதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எதிர்க்கிறது. அப்படிப்பட்ட முயற்சிகளில் நாங்கள் ஈடுபட மாட்டோம்.
போர் நடந்து வரும் பகுதிகளுக்கு செல்ல எங்களுக்கு அனுமதி கிடைக்கிறது. இருப்பினும் அப்பகுதிகளில் மருத்துவ வசதி மிகவும் மோசமாக உள்ளது. முறையான மருத்துவமனைகள் இல்லை. காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதிகள் இல்லை, மரு்நதுகள் இல்லை. இதனாலும் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன.
விடுதலைப் புலிகள் இடைவிடாமல் அரசுப் படையினரோடு மோதி வருவதால் நிலைமை மேலும் மோசமடையும் என கருதுகிறோம் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications