தடியடி-வக்கீல்களுக்கு மருத்துவப் பரிசோதனை
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீஸார் நடத்திய தாக்குதலில் காயமடைந்த வக்கீல்களுக்கு, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் பரிந்துரைப்படி இன்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
பிப்ரவரி மாதம் 19ம் தேதி மாலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வரலாறு காணாத மோதல் மூண்டது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் விசாரித்தது.
விசாரணைக்குப் பின்னர் காயம் அடைந்த வக்கீல்களுக்கு தொடர் சிகிச்சை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதன்படி உயர்நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய மருத்துவ கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டி காயம் அடைந்த வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் ஆகியோரை மருத்துவ பரிசோதனை தொடர்பாக அழைத்தது. இதையடுத்து இன்று காலை சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதற்கு உயர்நீதிமன்றப் பதிவாளர் நல்ல சேனாதிபதி தலைமை வகித்தார். 10-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் குழு வக்கீல்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தியது.
இதில் 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவ முகாமை வக்கீல்கள் சங்கப் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.
இருப்பினும், உயர்நீதி்மன்ற மோதலில் போலீஸாரின் தவறுகள் குறித்து ஆராய தமிழக அரசு நியமித்த ஒரு நபர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் என வக்கீல்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் கூறுகையில், எங்களுக்கு எதிராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் தீர்மானம் போட்டுள்ளது. எனவே அந்த சங்கத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி நடத்தும் விசாரணையை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications