எவ்வளவு பணம் இருக்கு?-நேர்காணலில் விஜயகாந்த்

திமுக, அதிமுகவினருக்கு இணையாக செலவு செய்ய உங்களிடம் பணம் உள்ளதா என்பதே அவர் கேட்கும் முக்கிய கேள்வியாக உள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த நேர்காணலின்போது விஜயகாந்த் தவிர, இளைஞரணிச் செயலாளரும் அவரது மச்சானுமான சுதீஷ், தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி, துணைச் செயலாளர் ஆஸ்டின், பொருளாளர் சுந்தர்ராஜன் ஆகியோரும் உடனிருந்தனர்.
அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை நேர்காணலின்போது பார்க்கவே முடியவில்லை. அவரை ஓரம் கட்டிவிட்டனர்.
தேர்தலில் கூட்டணியா இல்லையா என்பதை இன்னும் தெளிவாக அறிவிக்காத விஜயகாந்த் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிக்கும் வேட்பாளர் நேர்காணலை நடத்திக் கொண்டுள்ளார்.
நேர்காணலுக்குச் சென்றவர்களிடம் முக்கியமாக கேட்கப்பட்ட கேள்விகள், தேர்தலில் உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும், எவ்வளவு பணம் வைத்துள்ளீர்கள், எவ்வளவு சொத்து உள்ளது என்பதே.
மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சொல்லி, இவ்வளவு பணத்தை செலவிட உங்களால் முடியுமா என்றும் விஜய்காந்த் கேட்டதாக சொல்கிறார்கள் நேர்காணலுக்கு போய் வந்த சிலர்.
அந்த அமெளண்டைக் கேட்ட பலரும் அதிர்ந்து போய், எனக்கு சீட்டே வேண்டாம் என்று அங்கேயே பின் வாங்கியுள்ளனர்.
இந் நிலையில் மதுரை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி ஆகிய 11 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் இன்று நடக்கிறது.
நாளை கன்னியாகுமரியில் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications