கறுப்பு ரவிக்கை: ஏர் இந்தியா பணிப்பெண்கள் அதிருப்தி!
மும்பை: ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான பணிப்பெண்களின் சீருடை ஏப்ரல் 1-ந் தேதி முதல் கறுப்பு நிறத்துக்கு மாறுகிறது.
இதற்கு விமானப் பணிப்பெண்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் பலமான போட்டியைச் சமாளிக்கும் விதத்தில் பல்வேறு மாறுதல்களைச் செய்து வருகிறது ஏர் இந்தியா நிறுவனம்.
இதன் ஒரு பகுதியாக சர்வதேச பயணிகளை கவரும் வகையில், தனது விமான பணியாளர்களுக்கு புதிய சீருடையை ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அறிமுகப்படுத்தவுள்ளது.
ஏர் இந்தியா அறிமுகம் செய்யவுள்ள பணிப்பெண்களுக்கான புதிய சீருடையில், சேலையில் கருப்பு-சிவப்புக் கோடுகள் உள்ளன. இந்த கோடுகள் குறுக்குவெட்டில் அமைந்துள்ளன. இதுபோல், ரவிக்கையில் கருப்பு நிறமும் கலந்து வருகிறது. இதற்கு தென்னிந்தியாவை சேர்ந்த விமான பணிப் பெண்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தென்னிந்தியாவில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கருப்பு நிறம் அபசகுணத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
இதனால் புதிய சீருடைக்கு, தென்னிந்தியாவைச் சேர்ந்த விமானப்பெண்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது
மேலும் தென்னிந்தியப் பெண்கள் சிவப்பு நிறமே ரவிக்கையே தங்கள் அழகை எடுப்பாகக் காட்டும் என நம்புவதால் கறுப்பு நிற சீருடைக்கு கடும் எதிர்ப்பு காட்ட முடிவு செய்துள்ளனர்.
இதுபற்றி விமான பணியாளர்கள் சங்க தலைவர் பரத்குமார் ரவுத் கூறுகையில், 'புதிய சீருடையை பற்றி முடிவெடுக்கும்போது பெண் சிப்பந்திகளை அவர்கள் கலந்தாலோசிக்கவில்லை. இதுமட்டுமின்றி, சேலையில் குறுக்கு கோடுகள் இடம் பெறுவதையும் பல பெண்கள் விரும்பவில்லை' என்றார்.
நிர்வாகத்தின் இந்த சீருடை மாற்ற முடிவை எப்படி எதிர்ப்பது என்பது குறித்து விமான பணிப்பெண்கள் தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"குற்ற உணர்வு.. நைட் தூங்க முடியல.." ஏர் இந்தியா விபத்து! ஓராண்டிற்கு பிறகும் உயிர் பிழைத்தவர் கதறல் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications