5 ஆண்டுகள்..ஒரு கேள்வி கூட கேட்காத தங்கபாலு!

நாடாளுமன்றத்திற்குப் போவதையே பெருமையாக நினைப்பவர்கள் பலர் உள்ளனர். அந்த பாக்கியம் அத்தனை இந்திய குடிமக்களுக்கும் கிடைத்து விடுவதில்லை.
அப்படிப்பட்ட புண்ணியம் கிடைக்கும் எம்.பி்க்கள் அங்கு போன பின்னர் எப்படி மாறிப் போய் விடுகிறார்கள் என்பதை அறிந்தால் கல் மனசும் வேதனைப்படும்.
காரணம், பல எம்.பிக்கள் அங்கு போய் வருவதோடு சரி. ஒரு கேள்வி கூட கேட்பதில்லை. மற்றவர்கள் பேசுவதை வாய் மட்டும் பார்த்து விட்டு திரும்பும் எம்.பிக்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பது, அவர்களைத் தேர்ந்தெடுத்த அப்பாவி மக்களின் தலையெழுத்து என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத் தொடருக்கும் பல லட்சம் செலவிடப்படுகிறது. ஆனால் கேள்வி - நேரம் என்ற அருமையான வாய்ப்பை எத்தனை எம்.பிக்கள் உருப்படியாக பயன்படுத்துகிறார்கள் என்றால் ஏமாற்றமே மிஞ்சும்.
சமீபத்தில் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, 14வது லோக்சபா கூட்டத்தின் கடைசி நாளின்போது, பல எம்.பிக்கள் ஒரு கேள்வி கூட கேட்காமல் ஐந்து ஆண்டுகளை கழித்து விட்டனர். இது வேதனை தருகிறது என்று கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட பேசா மடந்தைகள் பட்டியலில் நம்ம ஊர் எம்.பிக்கள் சிலரும் உள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கேள்வி நேரத்தின்போது ஒரு கேள்வி கூட கேட்காத தமிழக எம்.பிக்கள் இவர்கள்தான் - சேலம் தங்கபாலு (காங்.), பொள்ளாச்சி கிருஷ்ணன் (மதிமுக), நாகப்பட்டனம் ஏ.கே.எஸ். விஜயன் (திமுக), வேணுகோபால் (திமுக).
புதுமுக எம்.பியான ராதிகா செல்வி ஐந்து ஆண்டுகளில் நான்கு கேள்விகள் கேட்டுள்ளார். இதில் கடைசி 2 ஆண்டுகள் அமைச்சராக இருந்தார். அமைச்சராக இருப்பவர்கள் கேள்வி கேட்க முடியாது என்பதால் கடைசி 2 ஆண்டுகளில் இவர் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை.
தன்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்த சேலம் மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, எல்லோரும் சுபிட்சமாக, சுகமாக, சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று தங்கபாலு நினைத்து விட்டாரோ என்னவோ..!
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications