ஒரு சீட் கூட தராவிட்டால் அது என்ன கூட்டணி - கார்த்திக் டென்ஷன்
திருப்பூர்: என்னை கூட்டணிக்குள் இழுக்க பேரம் பேசினார்கள். ஆனால் சீட் தர மாட்டோம். ஆதரவு தாருங்கள் என்றார்கள். ஒரு சீட் கூட தராவிட்டால் எப்படி அது கூட்டணியாகும் என்று கோபமாக கேட்டுள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக்.
நடிகர் கார்த்திக்கின் நிலை என்ன என்று அவருக்கே இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பாஜக மட்டுமே அவருடன் கூட்டணி குறித்து பேசி வருவதாக தெரிகிறது. வேறு யாரும் கூப்பிட்டதாகத் தெரியவில்லை.
இந்த நிலையில் தன்னை கூட்டணிக்கு அழைத்ததாகவும், ஆனால் சீட் தர மாட்டோம், ஆதரவு மட்டும் தாருங்கள் என்று கேட்டதாகவும் கூறியுள்ளார் கார்த்திக்.
திருப்பூரில் நடந்த அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் கார்த்திக் பேசுகையில், மக்களுக்கு தேவையானது நீதி, நேர்மை, கட்டுப்பாடு ஆகியவைதான். இதை செய்பவர்களுக்குதான் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
ஆட்சி, அதிகாரம் என்பது மக்கள் சேவை செய்ய வேண்டும் என்பதுதான்.
தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் மாறிமாறி ஆட்சி செய்தாலும் மக்களின் தேவை தீர்க்கப்படாமல் உள்ளது. கோடிக்கணக்கில் அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் திருப்பூரில் குறைந்த அளவு செலவிட்டாலே பிரச்சினைகளை தீர்த்து விடலாம். ஆனால் அதையும்கூட ஆட்சியில் இருப்பவர்கள் செய்வதில்லை.
செய்த கடமைகளை சாதனை பட்டியலாக தெரிவித்து மக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும். அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கும் பணத்தில் 3ல் ஒரு பங்கை செலவிட்டாலே வறுமை ஒழியும். கட்சிகள் ஒரு கூட்டணியில் இருந்து மற்றொரு கூட்டணியில் இணைவதன் உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
லஞ்சம் மற்றும் கமிஷனுக்கு பெரும் பகுதி சென்று விடுவதால் திட்டப்பணிகள் தரமானதாக இல்லை. இந்த உண்மைகளை எல்லாம் நான் வெளியே தெரிவித்துவிடுவேன் என்பதால் என்னை யாரும் கூட்டணியில் சேர்க்க பயப்படுகிறார்கள்.
என்னை யாரும் கூட்டணியில் சேர்க்காவிட்டாலும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன். எந்த தொகுதி என்பதை பின்னர் அறிவிப்பேன்.
கூட்டணி குறித்து என்னிடம் பேசினார்கள். ஆதரவு தெரிவித்து மட்டும் பேசுமாறு கூறினார்கள். சீட் தர மாட்டேன் என்று கூறி, என்னிடம் பேரம் பேசினார்கள். ஒரு சீட் கூட தராவிட்டால் அது எப்படி கூட்டணியாகும்.
கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் தேர்தலில் போட்டியிடுவது உறுதி. அது எந்த தொகுதி என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றார் கார்த்திக்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications