நாஞ்சில் சம்பத்தை விடுதலை செய்யக் கோரி மனைவி வழக்கு
சென்னை: தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவர் நாஞ்சில் சம்பத்தை விடுதலை செய்யக் கோரி அவரது மனைவி சசிகலா சம்பத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் திருப்பூரில் நடந்த மதிமுக கூட்டத்தில் பேசுகையில், இந்திய இறையாண்மைக்கு விரோதமாக பேசியதாக கூறி போலீஸார் அவரைக் கைது செய்தனர். பின்னர் அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்தனர்.
இந்த நிலையில் சம்பத்தை விடுதலை செய்யக் கோரி அவரது மனைவி சசிகலா சம்பத் சென்னை உயர்நீதிமன்றத்தில மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், தேசத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் மட்டுமே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என அச்சட்டத்தின் விதி கூறுகிறது.
ஆனால் அரசு இந்த விதியை மீறி எனது கணவரைக் கைது செய்துள்ளது. எனவே இந்தக் கைது நடவடிக்கையை ரத்து செய்து எனது கணவரை விடுதலை செய்ய வேண்டும் என சசிகலா சம்பத் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் தர்மாராவ், சுப்பையா முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications