நாளை ஜி 20 மாநாடு-லண்டனில் மன்மோகன் சிங்
லண்டன்: ஜி20 மாநாட்டுக்காக பிரதமர் மன்மோகன் சிங் லண்டன் சென்றுள்ளார். நாளை மாநாடு தொடங்குகிறது. நான்கு நாட்களுக்கு நடைபெறுகிறது.
லண்டன், எக்ஸல் மையத்தில் நான்கு நாள் ஜி20 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. நாளை இந்த மாநாடு தொடங்குகிறது.
இதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய உயர் மட்டக் குழு லண்டன் சென்றுள்ளது. இந்தியக் குழுவில் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ்.அலுவாலியா, வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
உலகப் பொருளாதார நெருக்கடி குறித்து இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
தனது பயணத்தின்போது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கவுள்ளார் மன்மோகன் சிங்.
அதிபரான பின் இங்கிலாந்துக்கு ஒபாமா வருவது இதுவே முதல்முறையாகும்.
தீவிரவாத சதி-5 பேர் கைது:
இதற்கிடையே, எக்ஸல் மையத்தில் நாச வேலைக்குத் திட்டமிட்டிருந்ததாக ஐந்து பேரை லண்டன் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் பெண்கள் ஆவர். அவர்களிடமிருந்து கத்தி, துப்பாக்கிகள், சந்தேகத்திற்கிடமான கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்றும், அவர்கள் தேவான், பிளைமவுத் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் வடக்கு அயர்லாந்து போராட்டக் குழுவினராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications