கள்ளக்குறிச்சியில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா போட்டி?

தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (தனி) உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளை இணைத்து கள்ளக்குறிச்சி தொகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு திமுக கூட்டணியில் மத்திய அமைச்சர் வேங்கடபதி போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியி்ல் இந்த தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக சார்பில் தன்ராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில் பாமகவின் கோட்டைகளை சலசலக்க வைத்தார் விஜயகாந்த். முத்தாய்ப்பாக விருத்தாச்சலத்தில் அக்கட்சி வேட்பாளரை தோற்கடித்த விஜயகாந்த் இம்முறையும் பாமகவை ஒரு தொகுதியிலாவது வீழத்த வேண்டும் என முயற்சித்து வருகிறார்.
கடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக கள்ளக்குறிச்சி தொகுதியில் தற்போது இடம்பெற்றுள்ள சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 8 ஆயிரம் ஓட்டுக்கள் வாங்கியிருந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சியில் எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என தேமுதிகவினர் இருப்பதாக தெரிகிறது.
இதனால் இங்கு தனது மனைவி பிரேமலதாவை நிறுத்தினால் வெற்றி பெறலாம் என அவர் கருதுவதாக தெரிகிறது. இதற்கு கட்சி வட்டாரத்தி்ல் அமோக வரவேற்பும் இருக்கிறதாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications