வருணுக்கு குண்டாஸ்: உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: வருண் காந்தியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது ஏன் என்பதை விளக்குமாறு உ.பி அரசுக்கும், பிலிபித் மாவட்ட கலெக்டருக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து வருண் காந்தி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வருகிற 13ம் தேதிக்குள் விளக்கத்தை தாக்கல் செய்யுமாறு உ.பி. அரசுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக வருண் காந்தி தாக்கல் செய்திருந்த மனுவில், நான் சட்டவிரோதமாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளேன். இந்த சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்ய வேண்டும் என்றால் என்னென்ன விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அவற்றையெல்லாம் உ.பி. மாநில அரசும், பிலிபித் மாவட்ட ஆட்சித் தலைவரும் காற்றில் பறக்க விட்டுள்ளனர்.
என்னைக் கைது செய்தது தொடர்பான எந்த ஆவணத்தையும் மாநில அரசுக்கு எனக்குத் தரவில்லை.
நான் பிலிபித் தொகுதியில் பிரசாரம் செய்ய வேண்டும். இன்னும் சில நாட்களில் அங்கு பிரசாரம் முடியவுள்ளது. எனவே இந்த கைது நடவடிக்கையை ரத்து செய்து என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார் வருண் காந்தி.
முஸ்லீம்களுக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட இரு வழக்குகளில் ஏற்கனவே வருண் காந்திக்கு ஜாமீன் கிடைத்துள்ளது நினைவிருக்கலாம். ஜாமீன் கிடைப்பதற்கு முதல் நாளில்தான் அவரை தேசிய பாதுகாப்பபுச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாயாவதி அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications