ஆபரேஷன் மூலம் நூற்றுக்கணக்கானோரை அரவாணியாக மாற்றிய ஆந்திர டாக்டர் கைது
சென்னை: விபச்சாரத்தில் ஈடுபடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்களை ஆபரேஷன் மூலம் அரவாணியாக மாற்றி அவர்களது வாழ்க்கையில் விளையாடிய ஆந்திர டாக்டர் ஒருவரை சென்னை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கோவளத்தை சேர்ந்த சிறுவன் வினோத்குமார் (16), கடந்த 2006ம் ஆண்டு வீட்டில் கோபித்து கொண்டு வெளியேறினான். அவனை அரசி என்ற அரவாணி தன்னுடன் வட மாநிலத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வினோத் குமாருக்கு பல அரவாணிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கிருந்த அங்காளம்மாள் என்ற அரவாணி, வினோத் குமாரை புனேவுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வினோத் குமார் விபச்சார கும்பல் ஒன்றிடம் விற்கப்பட்டுள்ளார்.
அந்த கும்பல், சாந்தி என்ற அரவாணியிடம் வினோத்குமாரை விற்றுள்ளது. இந்நிலையில் சாந்தி ஆந்திராவில் உள்ள கடப்பாவைச் சேர்ந்த 75 வயதான டாக்டர் நாகண்ணா என்பவரிடம் வினோத் குமாரை அழைத்துச் சென்றது. அவர் அந்த சிறுவனை ஆபரேஷன் மூலம் அரவாணியாக மாற்றியுள்ளார்.
இதையடுத்து அவனுக்கு திரிஷா என பெயர் மாற்றப்பட்டு, விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டார். இந்நிலையில் மாலதி என்ற அரவாணி மூலம் தப்பி தனது வீட்டுக்கு வந்த அவர் சென்னை போலீசில் புகார் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து அரசி, சுப்பு, ராதா, சாந்தி, குட்டியம்மா, ஜோதி ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் கடப்பாவில் இருந்த நாகண்ணாவை கைது செய்து சென்னை கொண்டு வந்தனர்.
கல்லூரியில் தங்க மெடல் வாங்கியவர்...
இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் நாகண்ணாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையில்,
டாக்டர் நாகண்ணா சிறுவர்களை அரவாணிகளாக மாற்றுவதில் கைதேர்ந்தவர் என்றும், ரூ.5 ஆயிரத்துக்காக இந்த கொடூர ஆபரேஷன்களை செய்து வந்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. இவர் 100க்கும் மேற்பட்ட சிறுவர்களை அரவாணிகளாக மாற்றி உள்ளார்.
அவர் கர்னூல் அரசு மருத்துவ கல்லூரியில் படித்த போது தங்க மெடல் வாங்கிய மாணவர். அவர் கர்னூல் மருத்துவமனையில் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணராகவும் பணியாற்றியுள்ளார் என்றார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications