ராஜாவின் பெரம்பலூர் தொகுதியில் புகுந்த நெப்போலியன்

பி.ஏ. வரலாறு படித்த நெப்போலியன், திருச்சி மாவட்டம் பெருவளநல்லூரைச் சேர்ந்தவர். ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். அமைச்சர் கே.என்.நேரு இவருக்கு தாய்மாமன்.
மனைவி, இரு மகன்கள் உள்ளனர். புது நெல்லு புது நாத்து படம் மூலம் நடிக்க வந்தவர். 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்.
2001ம் ஆண்டு முதல் முறையாக வில்லிவாக்கம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அடுத்து 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் மயிலாப்பூரில் நிறுத்தப்பட்டார். அங்கு எஸ்.வி.சேகரிடம் படுதோல்வியைச் சந்தித்தார்.
இந்த முறை எம்.பி. தேர்தலில் களம் புகுந்துள்ளார். எம்எல்ஏவாக இருந்தபோது வில்லிவாக்கம் தொகுதியில் நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருந்தார் நெப்போலியன். அந்த அனுபவத்தைப் பலமாகக் கொண்டும், சொந்த மாவட்டத்திற்குப் பக்கத்தில் உள்ள தொகுதி என்ற கணக்கிலும் பெரம்பலூரில் தனது அதிர்ஷ்டத்தைப் பரீட்சித்துப் பார்க்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications