இத்தாலியில் பயங்கர பூகம்பம் 17 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ரோம்: இத்தாலியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பூகம்பத்தில் 17 பேர் பலியானார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

இத்தாலிய தலைநகர் ரோமில் இருந்து சுமார் 100 கிமீ., தொலைவில் உள்ள அகுலா என்ற நகரத்தில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.3 ரிக்டர் அளவுக்கு பதிவானது.

இதில் அங்கிருந்த பல்கலைக்கழக கட்டிடம், கிறிஸ்துவ ஆலயம் மற்றும் வீடுகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிந்து விழுந்த பல்கலைக்கழக கட்டிடத்தின் ஒரு பாதியில் சில மாணவர்கள் தூங்கி கொண்டிருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலோனர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிகிறது.

அதிகாலை நேரத்தில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 5 குழந்தைகள் உட்பட 17 பேர் வரை இறந்திருப்பதாக கூறப்படுகிறது. இது மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.

இதில் 100க்கணக்கானோர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இதையடுத்து தற்போது மீட்பு பணியில் இத்தாலி அரசு வேகம் காட்டி வருகிறது.

இத்தாலியின் கிழக்கு பகுதியில் உள்ள சில மலை கிராமங்களிலும் பூகம்பத்தை மக்கள் உணர்ந்ததாகவும், அங்கு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+