மினி லாரி மோதி 25 ஆடுகள் பலி-ஒருவர் படுகாயம்
சுசீந்திரம்: சுசீந்திரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆடுகள் மீது மினி லாரி ஒன்று மோதியதில் 25 ஆடுகள் பலியாகின. ஆடுகளை ஓட்டி சென்றவர் படுகாயம் அடைந்தார்.
ராதாபுரம் அருகேயுள்ள உதயத்தூர் ஊரை சேர்ந்தவர் சுடலையாண்டி. இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ராதாபுரத்திலிருந்து மேய்யச்சலுக்கு ஏற்றப்பகுதியான சுசீந்திரம் பகுதிக்கு 400 செம்மறி ஆடுகளுடன் வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருவதால், சுடலையாண்டி ஆடுகளுடன் ஊருக்கு திரும்ப முடிவு செய்தார்.
இதையடுத்து சுசீந்திரம் மெயின் ரோடு வழியாக காலை 5 மணிக்கு ஆட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பக்கம் வந்த மினி லாரி ஒன்று ஆட்டு மந்தைக்குள் புகுந்தது. பின்னர் சுடலையாண்டியையும் இடித்து சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே 25 செம்மறி ஆடுகள் பலியாகின. எட்டு ஆடுகள் படுகாயம் அடைந்தன.
சுடலையாண்டி உயிருக்கு ஆபத்தான நிலையில ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலையில் ரோடுகள் முழுவதும் சிதறி கிடந்த ஆடுகளின் உருப்புகளாலும், ரத்த சிதறல்களாலும் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆட்டு மந்தைக்குள் புகுந்த நாசம் செய்த மினி லாரி மாயமானது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications