124 தொகுதிகளுக்கு 16ம் தேதி முதல் கட்ட தேர்தல் - நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது
டெல்லி: முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 124 தொகுதிகளில் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. 16ம் தேதி இங்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 16ம் தேதி நாளை மறு நாள் நடைபெறுகிறது. மொத்தம் 124 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இங்கு பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிவுக்கு வருகிறது.
முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகள் ..
ஆந்திரா (22), கேரளா (20), உத்தரபிரதேசம் (16), பீகார் (13), மகாராஷ்டிரா (13), சட்டீஸ்கர் (11), ஒரிசா (10), ஜார்கண்ட் (6), அஸ்ஸாம் (3), அருணாச்சலபிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான்-நிக்கோபார் (1), லட்சத்தீவு (1), மிசோராம் (1), நாகலாந்து (1), மணிப்பூர் (1), ஜம்மு காஷ்மீர் (1).
கேரளாவில் 217 வேட்பாளர்கள்...
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 16ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 23ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடந்தது. இதில் 217 வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங், பாஜக பிரதம வேட்பாளர் அத்வானி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் பிரகாஷ் கரத், இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளர்
வரதன் ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.
ராகுல் காந்தி இன்று பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த 2 வாரங்களாக நடந்து வரும் அனல் பறக்கும் பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிகிறது.
மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பதட்டம் நிறைந்த தொகுதிகளாக கண்டறியப்பட்டு காசர்கோடு, கண்ணூர் தொகுதிகளில் மத்திய
போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications