போடிநாயக்கனூர்-3 மாதத்தில் 1100 பேருக்கு நாய்க்கடி
போடிநாயக்கனூர்: தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 1100 பேரை நாய் கடித்து சிகிச்சை பெற்றுள்ளனர். பெருகி விட்ட நாய்த் தொல்லையிலிருந்து தப்ப வழியில்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஜனவரி மாதம் முதல் மார்ச் 31ம் தேதி வரை ரேபிஸ் தாக்கிய நாயிடம் சிக்கி 1085 பேர் கடிபட்டுள்ளனர். மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு இதுவரை 33 பேரை நாய் கடித்துள்ளதாக போடி அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவ அதிகாரி மனோகரன் கூறியுள்ளார்.
ஆனால் இதுவரை நாய் கடித்து யாரும் இறக்கவில்லையாம். நாய் பிடிக்க ஊழியர்கள் போதிய அளவில் இல்லை. இதனால் நாய் பிடிப்பதும் முறையாக செய்யப்படுவதில்லை. இதனால்தான் நாய்கள் பெருத்து விட்ன. நாய் கடித்து சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக மனோகரன் கூறுகிறார்.
தேவி என்ற கல்லூரி மாணவி கூறுகையில், ஒரு நாளைக்கு ஐந்து பேரை நாய் கடித்து விடுகிறது. நாய்களிடமிருந்து தப்ப ஆட்டோ போன்ற வாகனங்களில் செல்ல வேண்டியுள்ளது. இரு சக்கர வாகனங்களில் போனால் கண்டிப்பாக நாயிடம் சிக்காமல் தப்ப முடியாது என்ற நிலை.
பகலில் கூட தப்பி விட முடிகிறது. ஆனால் இரவு நேரங்களில் டூவீலர்களில் எந்தத் தெருவிலும் போக முடியவில்லை என்கிறார் பீதியுடன்.
நறுமணப் பொருட்களுக்குப் பெயர் போன போடி நாயக்கனூரில் பெருகி விட்ட நாய்க் கடிக்கு முடிவே இல்லையா என்று மக்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications