124 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது
டெல்லி: முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 124 தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. இங்கு 16ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. மொத்தம் 124 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இங்கு பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வருகிறது.
முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகள் ..
ஆந்திரா (22), கேரளா (20), உத்தரபிரதேசம் (16), பீகார் (13), மகாராஷ்டிரா (13), சட்டீஸ்கர் (11), ஒரிசா (10), ஜார்கண்ட் (6), அஸ்ஸாம் (3), அருணாச்சலபிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான்-நிக்கோபார் (1), லட்சத்தீவு (1), மிசோராம் (1), நாகலாந்து (1), மணிப்பூர் (1), ஜம்மு காஷ்மீர் (1).
கேரளாவில் 217 வேட்பாளர்கள்...
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 16ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 23ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடந்தது. இதில் 217 வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங், பாஜக பிரதம வேட்பாளர் அத்வானி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் பிரகாஷ் கரத், இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளர் பரதன் ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.
கடந்த 2 வாரங்களாக இங்கு பிரசாரம் நடந்து வந்தது.
மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பதட்டம் நிறைந்த தொகுதிகளாக கண்டறியப்பட்டு காசர்கோடு, கண்ணூர் தொகுதிகளில் மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் கட்ட வாக்கு பதிவில் களத்தில் நிற்கும் முக்கிய வேட்பாளர்கள்:
பீகார் - சரன் - லாலு பிரசாத் யாதவ்.
மகாராஷ்டிரா - பந்தாரா-கோன்டியா - பிரபுல் படேல்.
உ.பி. - வாரணாசி - முரளி மனோகர் ஜோஷி
ஆந்திரா - மகபூப் நகர்- சந்திரேசகர் ராவ், ஸ்ரீகாகுளம் - எர்ரான் நாயுடு.
கேரளா - திருவனந்தபுரம் - சசிதரூர்.
-
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
பிரஸ் மீட் முக்கியமல்ல... மக்கள் நலத் திட்டங்களே முக்கியம் - அமைச்சர் செங்கோட்டையன் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications