எனக்கு பிரதமராக ஆசையில்லை-ஜெயலலிதா

டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
நாங்கள் பாமக, சிபிஎம், சிபிஐ, மதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். இந்தக் கூட்டணியின் லட்சியமே மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் என்று கூறிய ஜெயலலிதாவிடம்,
தேர்தலுக்கு பின் வேறு கட்சியுடன் (பாஜக) கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, ஒரு நல்ல அரசியல்வாதி எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விட மாட்டார், அதனால் அம்மாதிரியான கூட்டணி அமைக்க வேண்டியபட்சத்தில் தோழமை கட்சிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். ஆனால் இப்போது அது குறித்து பேசுவது பொறுத்தமாக இருக்காது.
நான் அமைத்துள்ள கூட்டணி தமிழகத்திலும் புதுச்சேரியிலும் மாபெரும் வெற்றி பெறும் என்றார்.
வைகோ தேச விரோதமாக பேசவில்லை...
இலங்கை விவகாரத்தில் வைகோ தெரிவித்து வரும் கருத்துக்கள் குறித்த கேள்விக்கு,
வைகோ எப்போதும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி தான் வந்திருக்கிறார். முன்பு அவர் காங்கிரஸ், பாஜக கூட்டணிகளில் இருந்தபோது அவரது பேச்சு குறித்து யாரும் சர்ச்சையைக் கிளப்பவில்லை. இப்போது மட்டும் அதை எழுப்ப வேண்டிய தேவை?. வைகோ தேச விரோதமாக ஏதும் பேசவில்லை.
இலங்கை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு படுமோசம். அப்பாவித் தமிழர்கள் கொலை செய்யப்படுவதைத் தடுக்க அவர்கள் தவறிவிட்டனர். இந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
நீங்கள் பிரதமராக திட்டம் போடுவதாகத் தெரிகிறதே என்ற கேள்விக்கு, எனக்கு பிரதமர் பதவி மேல் ஆசையே இல்லை. நம் நாடு வளம் பெற வேண்டும், சூப்பர் பவர் என்ற நிலையை அடைய வேண்டும் என்பதே என் ஆசை என்று கூறியுள்ளார்.
அம்பேத்கர் சிலைக்கு மாலை:
இதற்கிடையே இன்று டாக்டர் அம்பேத்காரின் 119வது பிறந்த நாளையொட்டி கோடம்பாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications