ஜெட் ஏர்வேஸில் 500 ஊழியர் நீக்கம்
மும்பை: ஜெட் ஏர்வேஸ் தனது 500 பணியாளர்களை நீக்குகிறது.
பயணிகள் குறைவு மற்றும் லாபம் குறைவு காரணமாக அடுத்து என்ன செய்வது என்று ஹைதராபாதில் நேற்று கூடிப் பேசினர் அனைத்து விமான நிறுவனங்கள் தலைமை செயல் அலுவலர்கள்.
இக் கூட்டத்துக்குப் பின்னர், தங்களின் இந்த முடிவை அறிவித்துள்ளது ஜெட் ஏர்வேஸ்.
இப்போது நீக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் கேபின் எஞ்ஜினீயர்களே. இவர்களுக்கு 30 நாள் ஊதியத்துடன் பணி நீக்க ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் சில அலுவலகங்கையும் மூடிவிட ஜெட் முடிவு செய்துள்ளது.
மோசமான நிதி நெருக்கடியிலிருந்து நிறுவனத்தைக் காக்க தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெட் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல், பணி நிரந்தரம் பெறாத ஊழியர் மட்டுமே இதுபோல நீக்கப்படுவதாகவும், பணி நிரந்தரம் பெற்றவர்கள் யாரும் நீக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
சென்னை - துபாய் தினசரி ஜெட்!:
இந் நிலையில் இந்தியாவின் முன்னணி தனியார் விமான நிறுவனம் ஜெட், சென்னை - துபாய் மார்க்கத்தில் தினசரி விமான சேவையைத் துவங்குகிறது.
ஏப்ரல் 23-ம் தேதி முதல் இந்த விமானம் இயக்கப்படுகிறது. ஏற்கெனவே இந்த நிறுவனம் மும்பை - துபாய் மார்க்கத்தில் விமானம் இயக்கி வருகிறது.
சென்னை - துபாய் விமானம் முழுக்க முழுக்க சொகுசு வசதிகள் கொண்டதாகும். ஒவ்வொரு இருக்கையும் மிகவும் சொகுசாகவும் வீடியோ, ஆடியோ வசதிகள் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது என ஜெட் ஏர்வேஸ் உதவி பொது மேலாளர் ஜோசப் ஆப்ரஹாம் தெரிவித்துள்ளார்.
'இந்த விமானம் விரைவிலேயே பயணிகளின் அபிமானத்துக்குரியதாக மாறிவிடும். இதுபோன்ற சொகுசு விமானங்களை நிறைய இயக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications