அச்சுறுத்திய பிஜிலி-தப்பிய தமிழகம்-வங்கதேசத்தை இன்று தாக்கும்
சென்னை: வங்கக் கடலில் உருவாகி, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மையமிட்டிருந்த பிஜிலி புயல் ஒரு வழியாக ஒரிசாவைக் கடந்து வங்கதேசத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.
வங்கக் கடலில் ஒரு வாரத்திற்கு முன்பு பிஜிலி என்ற புயல் உருவானது. இது வலுப்பெற்று தொடர்ந்து மையம் கொண்டிருந்ததால் தமிழகத்தின் தென் பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது.
தமிழகத்தை அது தாக்கக் கூடும் என அஞ்சப்பட்டது. ஆனால் திடீரென அது ஆந்திரா பக்கம் நகர்ந்தாதல் தமிழகத்திற்கு ஆபத்தில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில் பிஜிலி புயல் நேற்று ஒரிசாவைக் கடந்து போய் விட்டது. தற்போது அது வங்கதேசத்தை நோக்கி போய்க் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்புயல், இன்று வங்காளதேசத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதற்கிடையே தமிழகத்தில் கடும் வெயில் நிலவி வருவதற்கு, கடல் காற்றுக்கு முன்பாக தரைக் காற்று வீசத் தொடங்கியிருப்பதே காரணம் என வானிலை மையம் விளக்கியுள்ளது.
முதலிலேயே கடற்காற்று வீசிவிட்டால் வெப்பநிலை இயல்பானதாக இருக்கும். காலநிலையை பொறுத்துத்தான் ஒரு இடத்தில் வெப்பநிலை இயல்பானதாகவும் அதிகமாகவும் அமைந்திருக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் விளக்கியுள்ளார்.
வேலூரில் 105 டிகிரி வெயில்
இதற்கிடையே நேற்று தமிழத்திலேயே அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியது. தமிழகத்தின் பல முக்கிய நகரங்களிலும் வெயில் 100 டிகிரியளவுக்கு வெளுத்து வாங்கியது.
சென்னை 100, மதுரை 100.4 என வெயில் கொளுத்தியது. கோவையில்தான் குறைந்தபட்சமாக 95 டிகிரி வெயில் அடித்தது.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications