பாஜகவில் இணைந்தார் டோணியின் அண்ணன்
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.டோணியின் அண்ணன் நரேந்திர சிங் டோணி, பாஜகவில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அத்வானிதான் எனது குரு. அவரது கொள்கைகளை நான் பின்பற்றுகிறேன். கட்சிக்கும், ஜார்க்கண்ட் மாநில வளர்ச்சிக்கும் பாடுபடப் போகிறேன்.
என்னைச் சுற்றி ஏழை மக்கள் இருப்பதைப் பார்த்துதான் நான் அரசியலுக்கு வந்தேன். அவர்களை உயர்த்துவதே எனது லட்சியம்
வாஜ்பாய், அத்வானி போன்ற மாபெரும் தலைவர்கள் உள்ள ஒரே கட்சி பாஜகதான். எனவேதான் பாஜகவை தேர்ந்தெடுத்தேன்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தனது மாநிலத்தை செழுமையாக வைத்திருப்பதும் என்னைக் கவர்ந்தது என்றார் நரேந்திர சிங் மோடி.
38 வயதாகும் நரேந்திர சிங் மோடி, தன்னைப் பின்பற்றி தம்பி டோணியும் அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து என்னால் கூற முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications