இலங்கை அமைச்சர் மகளுக்கு மருத்துவ சீட் வாங்கித் தந்த 'ரா'!- உளவாளியுடன் சண்டையால் படிப்பு பாதிப்பு!!

அவுட்லுக் இதழ் இது தொடர்பான ரகசிய பேரங்களை வெளிப்படுத்தியுள்ளது.
உளவாளி ரவி நாயர்..
அமைச்சர் ரோகித பொகல்லகாமாவின் மகள் மருத்துவக் கல்வியைத் தொடர்வதற்காக இந்தியாவின் உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் அனுமதியைப் பெற்றுள்ளார். இதற்கு ரா பெரும் உதவி புரிந்துள்ளது.
அதேசமயம், கொழும்பிலிருந்து செயல்பட்டு வந்த ரா உளவு அமைப்பைச் சேர்ந்த உளவாளிக்கும், ரோகித பொகல்லகாமாவுக்கும் இடையே திடீர் பிரச்சினை ஏற்பட்டதால், அது அவருடைய மகளின் படிப்பையே பாதிக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது.
கொழும்பிலிருந்து செயல்பட்டு வந்த அந்த உளவாளியின் பெயர் ரவி நாயர். இவருக்கு தனது கொழும்பு இல்லத்தையே வாடகைக்கு விட்டிருந்தார் ரோகித.
பணம் கட்டுவதில் பஞ்சாயத்து..
இந்த நிலையில் வீட்டுக்குத் தேவையான பல விலை உயர்ந்த பொருட்களை ரவி நாயர் வாங்கியுள்ளார். ஆனால் அதற்கான பணத்தை யார் கொடுப்பது என்பதில் இருவருக்கும் இடையே மோதல் மூண்டதாம்.
இதனால் கோபமடைந்த ரோகித, தனது கோபத்தை நேரடியாக ரவி நாயரிடம் காட்ட முடியாமல், சீன உளவு அமைப்பைச் சேர்ந்த ஒருவருடன் ரவிக்கு தொடர்பு இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளார்.
இதனால் ரவி நாயரை இந்திய அரசு திரும்ப அழைத்துக் கொண்டது. அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் ரோகித கூறிய செய்தியில் உண்மை இல்லை என்று தெரிய வந்ததாம்.
ரோகிதவின் செயலால் கடுப்பான ரா, அவரது மகள் படிப்புக்கு இடையூறு செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவரால் தொடர்ந்து படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications