நான் வேங்கை-விஜயகாந்த் கொக்கு: ராஜேந்தர்
கள்ளக்குறிச்சி: நான் வனத்தில் வளர்ந்த வேங்கை. ஆனால் விஜயகாந்த் நேற்று முளைத்த கொக்கு எனது தனது பாணியில் விஜயகாந்த்தை விமர்சித்துள்ளார் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர்.
இது இறைவனின் திட்டம்..
லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் நேற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட தனது மனைவி உஷா, தம்பி வாசு புடை சூழ வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கள்ளக்குறிச்சியில் நான் போட்டியிடுவது இறைவனுடைய திட்டம். எனக்கு ஒருமுறை வாக்களித்தால், கள்ளக்குறிச்சியை இந்தியாவே பேசும் அளவுக்கு மாற்றிக்காட்டுவேன்.
இலங்கை தமிழர் பிரச்னைக்காக சிறுசேமிப்பு குழு துணைத்தலைவர் பதவியை இழந்தேன். ஆனால் நடிகர் விஜயகாந்த் என்னைப்போல குரல் கொடுத்ததுண்டா?
விஜயகாந்த் நேற்று முளைத்த கொக்கு, நான் வனத்தில் வளர்ந்த வேங்கை.
கடந்த காலங்களில் பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என்று துடித்த ஜெயலலிதா, இப்போது இலங்கை தமிழர் பிரச்னையை தேர்தல் ஆயுதமாக கையில் எடுத்துள்ளார் என்றார் ராஜேந்தர்.












Click it and Unblock the Notifications