கவனத்தை திசை திருப்பவே உண்ணாவிரதம்-சோ
சென்னை: தனி ஈழம் அமைப்போம் என்று ஜெயலலிதா கூறிதும் மீடியாக்களின் கவனம் அவர் பக்கம் திரும்பி விட்டதால், அதை திசை திருப்ப உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார் கருணாநிதி என துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி கூறியுள்ளார்.
கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தபோது சோ கூறுகையில், ஜெயலலிதாவுக்கு தமிழ் ஈழ அறிவிப்பைத் தொடர்ந்து மீடியா வெளிச்சம் கிடைத்ததைப் போல தனக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக கருணாநிதி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
மீடியா கவனத்தைப் பெறுவதுதான் இதன் நோக்கம். வேறு காரணம் எதுவும் இல்லை.
அவருக்கு அவரே முரண்பாடாகி விட்டார். இந்த உண்ணாவிரதத்தை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றார் சோ.
உண்ணாவிரதம் முடித்த பிறகு சோ கூறுகையில், இலங்கை அரசு போரை நிறுத்தி பல நாட்களாகிவிட்டது. கடந்த சில நாட்களாக அவர்கள் மக்களை மீட்பதிலும் நிவாரணம் வழங்குவதிலும் தான் கவனம் செலுத்தி வந்தனர் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் இலங்கை விவகாரம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. இப்போதுள்ள நிலையில் கருணாநிதியின் குடும்ப அரசியலால் தமிழகத்தில் அதிமுக 40 இடங்களிலும் வென்றிருக்கும். ஆனால், விஜய்காந்த் திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதால் அது திமுகவுக்கு கொஞ்சம் சாதகமாகும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications