நாடாளுமன்ற வளாகத்தில் இறங்கிய பொம்மை ஹெலிகாப்டரால் பீதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் உள்ள நாடாளுமன்றக் கட்டட வளாகத்திற்குள் பொம்மை ஹெலிகாப்டர் வந்து இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரிமோட் கன்ட்ரோல் மூலம் இந்த பொம்மை ஹெலிகாப்டர் இயக்கப்பட்டது. இந்த பொம்மை ஹெலிகாப்டர் தல்கோத்ரா ஸ்டேடியத்திலிருந்து பறந்து வந்து, நாடாளுமன்ற வளாகத்தில் இறங்கியது.
பேட்டரியால் இயங்கக் கூடிய இந்த ஹெலிகாப்டரை சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் பார்த்து விட்டு விரைந்து வந்து அதை மீட்டார்.
உடனடியாக நாடாளுமன்ற வளாகத்தில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டது. அதி விரைவுப் படையும் தயார்படுத்தப்பட்டது.
இது தவறுதலாக வந்த பொம்மை ஹெலிகாப்டர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும் சர்வ சாதாரணமாக வந்த இந்த ஹெலிகாப்டர் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications