அவனை தூக்கி வெளியே வீசுங்கடா-ராமதாஸ்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலாட்டா செய்த பாமக தொண்டரை டாக்டர் ராமதாஸ் வெளியே தூக்கி வீசி எறியச் சொன்னார்.
திண்டுக்கல் தொகுதியில் அதிமுக வேட்பாளராக பாலசுப்பிரமணியன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் ராமதால் கலந்து கொண்டார்.
டாக்டர் ராமதாஸ் மேடை ஏறும் போது, மேடையில் பலர் இருந்ததால் மேடை சரிந்து விழுந்து விடும் என கருதி நிர்வாகிகள் சிலரை மேடையில் இருந்து கீழே இறங்கச் சொன்னார்கள்.
இதனால் டென்சனான நிர்வாகி ஒருவர் வெற்றி பெறுவதற்கு முன்பே இப்படி என்றால் வெற்றி பெற்ற பின்பு எப்படி என்று ஆவேசப்பட்டார். அவரை நிர்வாகிள் சமாதானம் செய்தனர். அதற்குள் ஒரு தொண்டர் தொடர்ந்து விசில் அடித்து, கூச்சல் போட்டார்.
இதனால் கடுப்பான ராமதாஸ், விசில் அடித்து கூச்சல் போட்ட நபரைப் பார்த்து, அவனை கூட்டத்தில் இருந்து தூக்கி வீசுங்கடா என்றார் கோபத்துடன்.
இதையடுத்து ஒரு குரூப் அந்த நபர் மீது பாய்ந்து அவரை பேஸ்ட்கட் பால் வீசிவது போல தூர வீசினர். அவர் கீழே விழுந்த இடத்திலிருந்து இன்னொரு குரூப் தூக்கி வீசியது.
இதைத் தொடர்ந்து எழுந்து ஓட்டமாய் ஓடி தப்பினார் அந்த நபர்.
இதையடுத்து டாக்டர் ராமதாஸ் பேசுகையில், இந்த கலாட்டாகளுக்கு காரணம் யார் தெரியுமா கருணாநிதி தான் என்று ஒரே போடாக போட்டார்.
ஆனால, விசாரித்ததில் தெரிந்தது தூக்கிவீசப்பட்டவர் பாமகவைச் சேர்ந்தவர் என்று.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications