ஈழம்: ஜெ. கொள்கையில் தெளிவு இல்லை - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
கோபிச்செட்டிப்பாளையம்: இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் ஜெயலலிதா முன்பு ஒரு கருத்தை கூறினார். தற்போது ஒன்றை கூறுகிறார். அவரிடம் இவ்விஷயத்தில் தெளிவான சிந்தனை இல்லை என ஈரோடு காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,
இலங்கை பிரச்சினையில் ஜெயலலிதா முன்பு, ஒரு கருத்தை கூறினார். தற்போது வேறு ஒன்றை சொல்கிறார். இது இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் அவருக்கு தெளிவான சிந்தனை இல்லை என்பதையே காட்டுகிறது. இதை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்.
இலங்கை அரசு விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் இருக்கிறது. இதனால் விடுதலை புலிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.
பூரண மதுவிலக்கு தான் காங்கிரசின் கொள்கை ஆகும். அதற்கு எப்போதும் நாங்கள் தடையாக இருக்க மாட்டோம். வெளிநாட்டு மதுபானங்களை அரசே விற்பனை செய்யும் போது, கள்ளை விற்பனை செய்வதில் தவறு இல்லை.
ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் பிரசாரம் செய்த போது, நான், கோபிசெட்டிபாளையம் தொகுதி மக்களுக்கு எந்த நல திட்டங்களையும் செய்யவில்லை என்று கூறியுள்ளனர். நான் செய்த திட்டங்களை புத்தகமாக வெளியிட்டு உள்ளேன் என்றார் இளங்கோவன்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications