8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 12000 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்!
மும்பை: எட்டு மாதங்களுக்குப் பிறகு மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 12000 புள்ளிகளைத் தொட்டுள்ளது.
இன்று சந்தையின் ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. எடுத்த எடுப்பிலேயே 592 புள்ளிகள் உயர்ந்தது சந்தையில். இதனால் 12000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 160 புள்ளிகள் உயர்ந்தது. கடந்த செப்டம்பருக்குப் பின் நுகர்வோரின் நம்பிக்கை இப்போதுதான் வெகுவாக மேம்பட்டிருப்பதாகவும், அதன் விளைவாக அமெரிக்க பங்குச் சந்தை வலுவடைந்திருப்பதாகவும் அதனாலேயே இந்த பாஸிடிவ் மாற்றம் என்றும் கூறப்படுகிறது.
இன்று மட்டுமே 731 புள்ளிகள் உயர்ந்து 12131 புள்ளிகளாக நிலைப் பெற்றது. நிப்டி 180 புள்ளிகள் உயர்ந்து 3654-ல் நிலை பெற்றது. ஸ்டெர்லைட், ஹிண்டால்கோ, எச்டிஎப்சி, மகிந்திரா அண்ட் மஹிந்திரா, ஐசிஐசிஐ நிறுவனங்களின் பங்குகள் இன்று நல்ல லாபம் கண்டன.
இன்றைய வர்த்தகத்தில் முன்னணி நிறுவனப் பங்குகள் ஒன்றுகூட நஷ்டத்தைச் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாற்றம் ஆசியாவின் இதர பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. ஹாங்காங்கின் ஹாங்க்செங் 3.52 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இப்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 12134 புள்ளிகளாகவும், நிப்டி 3654 புள்ளிகளாகவும் உள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications