பாக்.கை பிரிக்க முடிந்தபோது ஏன் இலங்கையைப் பிரிக்க முடியாது? - ஜெ. கேள்வி
சென்னை: இலங்கைக்கு ராணுவத்தை அனுப்ப முடியாது. தனி ஈழம் அமைக்க முடியாது என கூறும் பிரதமர் மன்மோகன் சிங், பின் எந்த அடிப்படையில் வங்கதேசத்தை இந்திரா காந்தி உருவாக்கித் தந்தார் என்பதை விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர்
ஜெயலலிதா.
சென்னையில் நேற்று பிரசாரத்தை முடித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ஜெயலலிதா. அப்போது அவரிடம் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைக்கு ராணுவத்தை அனுப்ப முடியாது, தனி ஈழம் அமைக்க முடியாது என கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு ஜெயலலிதா, அப்படியானால் இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது கிழக்கு பாகிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்பி எப்படி வங்காளதேசத்தை உருவாக்கி கொடுத்திருக்க முடியும். இதற்கு அவரை விளக்கம் கொடுக்க சொல்லுங்க என்றார்.
இலங்கைக்கு பயங்கர ஆயுதங்களை நாங்கள் வழங்கவில்லை. அவர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி தான் கொடுத்திருக்கிறோம் என்று பிரதமர் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, ஆயுதங்கள் எங்கிருந்து இலங்கைக்கு சென்றாலும் ஆயுதம் ஆயுதம் தான். அது மக்களை கொல்ல கூடிய ஆயுதம். கொல்ல முடியாத ஆயுதம் என்று பிரிக்க முடியாது. இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்புவது தவறு என்றார்.
காங்கிரஸ் கட்சியுடன் ஒத்த கருத்துள்ள கட்சி அ.தி.மு.க. என்று ராகுல் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, அவர் அப்படி சொல்லவில்லை என்று அவர்களின் கட்சி தலைமை அறிவித்து இருக்கிறதே? என்றார் ஜெயலலிதா.
தேர்தலுக்கு பிறகு கூட்டணி தொடர்பாக காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி தலைவர்களிடம் பேசுவீர்களா? என்ற கேள்விக்கு, நாங்கள் 3-வது அணியில் இருக்கிறோம். 3-வது அணியில் இருக்கும் போது வேறு ஒரு கூட்டணி பற்றி சிந்திக்கும் ஆள் நான் இல்லை. அப்படி பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
இப்போது என் கவனம் முழுவதும் தேர்தலில் 40-க்கு 40 இடங்கள் பெறுவதிலே தான் இருக்கிறது என்றார் ஜெயலலிதா.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications