காங். அல்லது பாஜக: மூன்றாவது அணி வேண்டாம்-தொழிலதிபர்கள்
டெல்லி: மத்தியில் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சியால் தான் நிலையான ஆட்சியமைக்க முடியும் கடந்த 10 ஆண்டு காலக்கட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரம் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. இது இனியும் தொடர இந்த இரு கட்சிகளில் ஒருவர் தான் ஆட்சியமைக்க வேண்டும். மூன்றாவது அணி ஆட்சியமைக்க கூடாது என்பதே பல தொழிலதிபர்களின் விருப்பமாக இருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளையுடன் முடிவடைகிறது. வரும் மே 16ம் தேதி காங்கிரஸ் ஆட்சியை தொடருமா அல்லது பாஜக தலைமையில் புதிய ஆட்சி மலருமா அல்லது மூன்றாவது ஆச்சர்யம் ஏற்படுத்துமா என்பது குறித்து தெரிய வரும்.
இந்நிலையில் தொழிலதிபர்கள் பலர் காங்கிரஸ் அல்லது பாஜக கூட்டணி தான் ஆட்சியமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு மத்தியில் அமைந்த நிலையான ஆட்சி தான் காரணம்.
ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆண்டு பாஜகவும், காங்கிரசும் உறுதியான பொருளாதார கொள்கைகளால் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்து சென்றுள்ளன. தற்போது உலகம் முழுவதும் கடும் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளது.
ஆனால் இதன் தாக்கம் இந்தியாவில் பெரிதாக இல்லை.
இதற்கு காரணம் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் நிலையான ஆட்சி இருந்தது தான். உலகளவில் மற்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 'மைனசில்' சென்று கொண்டிருக்க இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருப்பது பெரிய விஷயம்.
ஆனாலும் பொருளாதாரத்துக்கு பாதிப்பு இல்லை என கூற முடியாது. ஆனால், மற்றவர்களை விட குறைவு அவ்வளவு தான். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள மந்தம் காரணமாக கடந்த 6 மாத காலத்தில் நமது ஏற்றுமதி அளவு குறைந்து கொண்டே வந்துள்ளது.
வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்...
இது போன்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க, அடுத்து வரும் அரசு செலவுகளை அதிகரிக்க வேண்டும். அவர்கள் உள்கட்டமைப்பு போன்ற வளர்ச்சிக்கு தொடர்பான துறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.
நமது இந்திய பொருளாதாரம் மேலும் முன்னேற்ற கண்டும் விரைவில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்ட, இது மிகவும் அவசியமானது.
இது நடக்க வேண்டும் என்றால் பாஜக அல்லது காங்கிரஸ் இவற்றில் ஒன்று ஆட்சிக்கு வரவேண்டும். மூன்றாவது அணியினர் ஏற்கனவே ஒரு முறை ஆட்சி அமைத்து பல பிரதமர்களை மாற்றி, தோல்வியடைந்தனர். அவர்களால் நிலையான ஆட்சியை தர முடியாது என தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்து வரும் அரசு பொருளாதார வளர்ச்சியை மேலும் துரிதமாக்க முயல வேண்டும் எப்ஐசிசிஐ தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் செய்தி குறிப்பு ஒன்று கூறுகையில்,
நிறுவனங்களுக்கான வரியை படிபடியாக மாற்றுவதை விட்டுவிட்டு அடுத்த அமையும் புதிய அரசு பொருளாதார முன்னேற்றத்துக்கான புதிய முயற்சிகளை எடுக்க வேண்டும். வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனங்களை பாதுகாக்க, நிதித்துறையை அதிக வலிமையானதாக மாற்ற வேண்டும்.
2003ம் ஆண்டு முதல் 2008 வரை இந்திய பொருளாதார அன்னிய முதலீடுகளால் வேகமாக வளர்ந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இதில் தேக்கநிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் மத்திய நிதித்துறை இந்த ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு தயாராகி வருகிறது. இதையடுத்து இந்திய வருவாய் செயலாளர் பிவி பிதே, இந்திய தொழில் வர்த்தக சபையின் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் ஆலோசனைகளை பெற்றுள்ளது.
கூட்டணி அரசு தான்...
இது குறித்து எப்ஐசிசிஐ தலைவர் ஹர்ஸ் பதி சிங்கானியா கூறுகையில், தேர்தலுக்கு பின் கூட்டணி அரசு தான் அமையும் என்பது மறுக்கமுடியாது. என்னோட பார்வையில் காங்கிரஸ் அல்லது பாஜக தலைமையில் ஆட்சியமைய வேண்டும்.
காஸ்மோஸ் நிறுவனத் தலைவர் அனில் அகர்வால் கூறுகையில், அடுத்த அரசு இரண்டு தேசிய கட்சிகளில் ஒன்றால் அமைக்கப்பட வேண்டும் என்றார்.
அப்பலோ டையர்ஸ் நிறுவனத்தின் தலைவர் அன்கர் கன்வர் கூறுகையில், மத்தியில் நிலையான அரசு அமைய வேண்டும். இதை ஏற்படுத்த கூடிய கட்சிகள் இரண்டு மட்டுமே. அவை பாஜக மற்றும் காங்கிரஸ் என்றார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications