கொண்டாட்ட தகராறு-அதிமுக பிரமுகர் கொலை
தஞ்சாவூர்: தேர்தல் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் அதிமுக பிரமுகர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அதிராமபட்டிணத்தில் கடைகள் அடைக்கப்பட்டது. பஸ்கள் ஓடவில்லை.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டிணத்தில் உள்ள பழஞ்செட்டி தெருவில் கனகராஜ் (46), ஜெயசுந்தர் (43), சிவக்குமார் (40) என மூன்று சகோதரர்கள் மளிகை நடத்தி வந்தனர். இவர்களுடன் கடையில் கனகராஜின் மகன் கமல்ராஜூம்(25) உதவி செய்து வருகிறார். இவர்கள் அனைவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக வென்றதை அடுத்து அக்கட்சியின் கவுன்சிலர் இன்பநாதன் என்பவர் அப்பகுதியில் வெடி வெடித்து வெற்றியை உற்சாகமாக கொண்டாடியுள்ளார். அவர்கள் அதிமுக பிரமுகர்களின் கடைக்கு முன்னதாகவும் வந்து வேட்டு போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து திமுகவினருக்கும், கடைசியில் இருந்த கனகராஜ் சகோதரர்கள் மற்றும் அவரது மகனுக்கும் இடையே, தகராறு ஏற்பட்டது.
இந் நிலையில் நேற்று காலை அதிமுக பிரமுகர்களின் கடைக்கு வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று கடையில் இருந்த நான்கு பேரையும் அரிவாளால் வெட்டியது.
இதில் பலத்த காயமடைந்த சகோதரர்கள் நான்கு பேரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஜெயசுந்தரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், போகும் வழியில் அவர் மரணமடைந்தார்.
இதையடுத்து அதிராம்பட்டிணத்தில் பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலை குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications