ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி?
சென்னை: அமைச்சர் ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக்கப்படலாம் என்று தெரிகிறது.
இதற்கு வசதியாக மதுரையில் மு.க.அழகிரிக்கு கேபினட் அமைச்சர் பதவியும், கனிமொழிக்கும் மத்திய இணையமைச்சர் பதவியும் அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
முதல்வர் கருணாநிதியின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பணிகளை ஏற்கும் வகையில், ஸ்டாலின் ஆதரவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைப்படி அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
முதல்வரால் பிரச்சாரம் செய்ய முடியாத நிலையில் இந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்த ஒரே திமுக தலைவர் ஸ்டாலின் தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போன தொகுதிகளுக்கும் இடங்களுக்கும் அதே நாளிலோ அல்லது அடுத்த நாளோ சென்று அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி பிரச்சாரம் செய்தார் ஸ்டாலின்.
கிட்டத்தட்ட 2 மாதம் ஜெயலலிதாவி்ன் சுற்றுப் பயணத் திட்டம் தான் ஸ்டாலினின் பயணத் திட்டமாகவும் இருந்தது.
மேலும் கருணாநிதியால் பிரச்சாரத்தை, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க முடியாத நிலை இருந்ததால் அதை தென் மாவட்டங்கள் தவிர மற்ற இடங்களில் முழுமையாக ஏற்றுக் கொண்டதும் ஸ்டாலின் தான். தென் மாவட்டங்களில் அழகிரி தான் இதை ஒருங்கிணைத்தார்.
திமுக தொடர்ந்து இரு மக்களவைத் தேர்தல்கள், ஒரு சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என நான்கு தேர்தல்களில் வென்றுள்ள நிலையில் ஸ்டாலினை துணை முதல்வராக்க இதுவே சரியான தருணம் என முதல்வர் கருணாநிதியும் மூத்த தலைவர்களும் கருதுவதாகத் தெரிகிறது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications