சிறுநீரக கோளாறு-சிபு சோரன் மகன் மரணம்
போகாரோ: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் சிபு சோரனின் மகனும், அக்கட்சியின் பொது செயலாளருமான துர்கா சோரன் நேற்று சிறுநீரக கோளாறு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 39.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சிபு சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார். இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த இடை தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது மூத்த மகன் துர்கா சோரன், அக்கட்சியின் பொது செயலாளராக இருந்து வருகிறார். சிபு சோரனுக்கு பின் அவர் தான் கட்சியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இரண்டு முறை தேர்வாகியுள்ள துர்கா சோரன் கடந்த 2005ல் நடந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.
அவர் கடந்த பல ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவரது சிறுநீரகம் ஒன்று கடந்த 2001ல் அகற்றப்பட்டது. இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்க சென்ற அவர் நேற்று காலை வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால், டாக்டர்கள் அவர் இறந்து பல மணி நேரம் ஆகிவிட்டதாக கூறிவிட்டனர். இதனால் சிபு சோரன் பெரிதும் மூட் அவுட்டாகியுள்ளார். சிபு சோரனின் மூன்று மகன்களில் இவர் தான் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications