காதலித்த தங்கையை கொன்ற அண்ணன் சரண்
நெல்லை: காதலில் ஈடுபட்ட தங்கையை கொலை செய்தார் அண்ணன். பின்னர் போலீஸில் அவர் சரணடைந்தார்.
நெல்லையை அடுத்த மேலபாலமடையை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஆறுமுககனி. இவர் பேட்டை ராணி அண்ணா கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
ஆறுமுக கனிக்கும் கட்டாம்புளியை சேர்ந்த ராமு என்ற வாலிபருக்கும் இடையே காதல் இருந்ததாக தெரிகிறது. இவர்களது காதலுக்கு ஆறுமுக கனி வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் ஆறுமுக கனியின் தாய் டவுனில் உள்ள தனது அக்காள் மகள் சபாபதி வீட்டில் ஆறுமுக கனியை கொண்டு விட்டார். சபாபதியின் கணவர் சரவணன் டவுனில் ஒரு பள்ளியில் காவலாளியாக உள்ளார்.
சிறிது நாட்கள் ஆறுமுக கனி சபாபதியின் வீட்டில் இருந்தார். சில நாட்களுக்கு முன்பு பழைய பேட்டையில் உள்ள ஆறுமுக கனியின் அண்ணன் ராஜசேகர் சபாபதி வீட்டுக்கு வந்தார். அவர் தனது வீட்டிற்கு ஆறுமுக கனியை கூட்டி சென்றார். இதன்பிறகு ஆறுமுக கனியை காணவில்லை.
தாய் வீட்டிற்கும் அவர் செல்லவில்லை. பழைய பேட்டையில் உள்ள அண்ணன் வீட்டிற்கும் அவர் போகவில்லை. சபாபதியின் வீட்டிலும் இல்லை.
சந்தேகம் அடைந்த ஆறுமுக கனியின் பெற்றோர் டவுண் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறுமுக கனியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தங்கையை தான் தான் கொலை செய்ததாக கூறி ராஜசேகர் நெல்லை கோர்ட்டில் சரணடைந்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications