கிழக்கில் விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் - 3 ராணுவத்தினர் பலி
அம்பாறை: இலங்கையின் கிழக்கில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் மறைந்துள்ள விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
வடக்கில் நடந்த கடும் சண்டைக்குப் பின்னர் அங்கு விடுதலைப் புலிகளின் செயல்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது ராணுவம்.
இருப்பினும் கிழக்கில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு வனப் பகுதியில் விடுதலைப் புலிகள் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ராணுவத்தினர் மீது நடந்த இரு வேறு தாக்குதல்களில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு கூறுகையில், கஞ்சிக்குடிச்சாறு வனப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளை தேடியழிக்கும் நடவடிக்கையில் இலங்கைப் படை ஈடுபட்டுள்ளது. சனிக்கிழமை புலிகள் நடத்திய பொறி வெடித் தாக்குதலில் சிக்கி ஒரு வீரர் கொல்லப்பட்டார். ஒருவர் காயமடைந்தார்.
இன்னொரு தாக்குதலில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். இருவர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications