பிரபாகரன் மனைவி-இளைய மகன் தப்பிவிட்டனர்!

ஆனால், அந்த உதவியாளர் யார் என்று அது தெரிவிக்கவில்லை.
இந்த மூவரும் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கையும் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணாவும் கூறியுள்ள நிலையில் இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அந்தப் பத்திரிக்கை கூறியுள்ளதாவது:
புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே போர் உச்ச கட்டத்தை அடைந்தபோது பிரபாகரனின் மகள் அயர்லாந்து நாட்டில் படித்து வந்தார். அவர் அங்கிருந்து இலங்கைக்கு வர விரும்பியபோது வேண்டாம் என்று பிரபாகரன் தடுத்துவிட்டார்.
அயர்லாந்திலிருந்து நார்வே தலைநகர் ஓஸ்லோவுக்குச் செல்லுமாறு கூறிவிட்டார். ஆனாலும் அவர் இப்போது ஓஸ்லோவில்தான் இருக்கிறார் என்று கூறிவிட முடியாது.
அதே நேரத்தில் மதிவதனியும் பாலசந்திரனும் இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழ்நாட்டுக்கு தப்பி வந்து அங்கிருந்து விமானம் மூலம் சிங்கப்பூருக்கு சென்று, அங்கிருந்து அவர்கள் ஏதோ ஒரு நாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டனர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் நடந்த கடுமையான சண்டையில் பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கூறிய ராணுவம் நந்திக் கடல் பகுதியில் கிடந்ததாக அவருடைய உடலைக் காட்டியது.
சில நாட்கள் கழித்து நந்திக்கடல் பகுதியிலேயே பிரபாகரனின் மனைவி, மகள், இளைய மகன் ஆகியோரின் உடல்களும் இருந்ததாகக் கூறியது. ஆனால் அவர்களை உடல்களைக் காட்டவில்லை.
அதே நேரத்தில் பெண்களின் உடல்களோ சிறுவர்களின் உடல்களோ அங்கு காணப்படவில்லை என்று மற்ற ராணுவ வட்டாரங்கள் மறுத்துவிட்டன.
நந்திக்கடல் பகுதியில் பிரபாகரனுடன் இலங்கை ராணுவத்தின் அதிரடிப்படை வீரர்கள் சண்டையிட்டனர். அவர்களுடைய மரபுப்படி இறந்த வீரர்களின் ஆயுதங்களை மட்டும் கைப்பற்றி தங்களது படைப்பிரிவுத் தலைவரிடம் அளிப்பார்கள். உடல்களைக் கைப்பற்றுவதோ அடையாளம் காண்பதோ அவர்களுடைய பணியல்ல.
மே 18ம் தேதி மாலை கமாண்டோ படையைச் சேர்ந்த இளம் வீரர் ஒரு பிஸ்டலையும் இடுப்பில் தொங்கவிட்டுக் கொள்ளும் துப்பாக்கி உறையையும் எடுத்துச்சென்று தனது படைத் தலைவரிடம் அளித்தார்.
அதில் 'டி.வி.பி. 001' என்று ஆங்கிலத்திலும் த.வி.பு. 001 என்று தமிழிலும் பதிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த அந்த படைப்பிரிவுத் தலைவர் அது பிரபாகரனுடைய உடல் என்பதை உணர்ந்தார்.
டி.வி.பி. என்பது தமிழ் விடுதலைப் புலிகள் என்பதன் சுருக்கம். 001 என்பதும் அந்த இயக்கத்தின் தலைவர் என்பதால் பிரபாகரனுக்கு அளிக்கப்பட்ட எண் அது என்பதையும் அறிந்து சண்டையில் பிரபாகரன் பலியானதாக அறிவித்தார்.
இதையடுத்து பிரபாகரனின் உடலை அடையாளம் காண, அவருடனே பல ஆண்டுகள் இருந்த கருணா அம்மானும், தயா மாஸ்டரும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பிரபாகரனின் உடலில் இருந்த மச்சங்கள், காயங்களை வைத்து அது பிரபாகரன்தான் என்பதை உறுதிப்படுத்தினர் என்று 'பாட்டம்லைன்' பத்திரிக்கை தெரிவிக்கிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications