தயாளு அம்மாள் வந்த விமானம் தரையிறங்குவதில் சிக்கல்
டெல்லி: டெல்லியில் பதவியேற்பு விழாவுக்கு சென்று திரும்பிய முதல்வர் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாள் வந்த விமானம் பலத்த காற்று வீசியதை அடுத்து 20 நிமிடம் தாமதமாக தரையிறங்கியது.
டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சர்களின் பதவியேற்பு விழாவில் திமுகவை சேர்ந்த அழகிரி, தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் அமைச்சர் பொறுப்பு ஏற்றுகொண்டனர்.
இந்த விழாவை நேரில் காண தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவியும், அழகிரியின் தாயாருமான தயாளு அம்மாள் டெல்லி சென்றிருந்தார். விழா முடிந்த நிலையில் அவர் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோருடன் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
மொத்த 100 பேர் பயணம் செய்த அந்த விமானம் நேற்று இரவு 7.35 மணிக்கு சென்னையில் தரையிறங்க இருந்தது. ஆனால், தரையிறங்கும் சமயத்தில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பலத்த காற்று வீசியது. இதையடுத்து விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
பின்னர் 20 நிமிடம் தாமதமாக 7.55 மணிக்கு விமானம் தனது இரண்டாவது முயற்சியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. முக்கிய விஐபிக்கள் வந்த விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தால் விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications