டியூப் லைட்டால் அடித்து வாலிபர் கொலை-4 பேர் கைது
சென்னை: சென்னை அருகே திருமண வரவேற்பு வீட்டில் நடந்த மோதலில் வாலிபர் ஒருவர் டியூப்லைட்டால் அடித்து கொல்லப்பட்டார். இதையடுத்து போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.
சென்னை அம்பத்தூர் காமராஜபுரம் டவுன்ஷிப் குவார்ட்டர்சை சேர்ந்தவர் நாகராஜன் (21). துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வரும் அவர் தனது நண்பர்கள் ஜான்சன், தேவகுமார், சார்லஸ், திருப்பதி ஆகியோருடன் சமீபத்தில் நடந்த யேசுதாஸ் என்பவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது டிஜிட்டல் பேனர் வைப்பது தொடர்பாக நாகராஜன், அவரது நண்பர்களுக்கும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சாமுவேல் (28), தேவபிரசாத் (26), மோகன்பாபு என்ற குட்டி (31), சாந்தி பிரசன்னா குமார் (35) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இவர்கள் நான்கு பேரும் சகோதரர்கள்.
வாக்குவாதமாக ஆரம்பித்த இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து கைகலப்பானது. அப்போது சாமுவேல் மற்றும் அவரது சகோதரர்கள், நாகராஜன் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியுள்ளனர்.
அப்போது திருமண வரவேற்பு வீட்டில் வைக்கப்பட்டிருந்த டியூப் லைட்டால் நாகராஜனை அடித்துள்ளனர். இதில் டியூப் லைட் ஒன்று உடைந்து நாகராஜனின் கழுத்தில் குத்தியது. இதையடுத்து நாகராஜன் ரத்த சொட்ட சம்பவ இடத்திலே பலியானார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சாமுவேல் மற்றும் அவரது சகோதரர்கள் மூவரையும் கைது செய்தனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications