இலவச டிவி-அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்!
உடுமலைப்பேட்டை: இலவச டிவி கோரி மலைப்பாதையில் 15 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து அமைச்சர் சாமிநாதனை பொது மக்கள் முற்றுகையிட்டனர்.
மேற்குத் தொடர்ச்சிமலையில் உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்டு உள்ளது மானுப்பட்டி, ஜல்லிபட்டி, ராவணாபுரம், தேவனூர்புதூர் ஊராட்சிகள்.
இந்த ஊராட்சிகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
ராவணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு இலவச டிவி வழங்கும் நிகழ்ச்சி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இலவச டிவி வழங்கும் நிகழ்ச்சி நடப்பது குறித்து தகவல் அறிந்த மாவடப்பு, கருமுட்டி, பூச்சிகொட்டாம்பாறை, குழிப்பட்டி செட்டில்மெண்ட் பகுதிகளை சேர்ந்த மலைவாழ் மக்கள் ராவணாபுரத்துக்கு படையெடுத்தனர்.
மலைப் பகுதியில் இருந்து 15 கி.மீ., தூரம் நடந்து வந்த இந்த மக்கள், நிகழ்ச்சிக்காக வந்த அமைச்சர் சாமிநாதனை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களை அமைச்சர் சாமிநாதன் சமாதானம் செய்தார். இதனையடுத்து அவர்கள் இலவச டிவி கோரி மனு அளித்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சாமிநாதன் உறுதியளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications