திருச்சி மேயர் தேர்தல்-காங். வேட்பாளர் சுஜாதா

திருச்சி மாநகராட்சி மேயராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாருபாலா தொண்டைமான், நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால், மக்களவைத் தேர்தலிலும் அவர் தோற்றுவிட்டார்.
தற்போது காலியாக உள்ள திருச்சி மேயர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளரை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சியின் பல்வேறு கோஷ்டிகளிடையே கடும் போட்டா போட்டி ஏற்பட்டது.
இந் நிலையில் நாளை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் சுஜாதா (38) போடியிடுவார் என்று இன்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு வெளியிட்டார்.
இதையடுத்து சென்னை வந்த சுஜாதா தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 60 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் திமுக-காங்கிரஸ் அணியில் 40 கவுன்சிலர்களும், அதிமுக அணியில் 20 கவுன்சிலர்களும் உள்ளனர்.
இதனால் நாளை நடைபெறும் மேயர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுஜாதா வெற்றி பெறுவது நிச்சயமாகிிட்டது.
தென்னூர் பகுதி கவுன்சிலராக உள்ள சுஜாதா, மாவட்ட காங்கிரஸ் செயலாளராகவும் உள்ளார்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications