நெல்லை புதிய கலெக்டர் பொறுப்பேற்பு
நெல்லை: நெல்லை மாவட்ட கலெக்டராக ஜெயராமன் இன்று பொறுப்பேற்றார்.
தேர்தலுக்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் நெல்லை மாவட்ட கலெக்டராக பழனியாண்டி நியமிக்கப்பட்டார். தற்போது அவர் பொதுத்துறை இணை செயலாளர் பதவிக்கு மாற்றப்பட்டு்ள்ளார்.
இதையடு்த்து நாகப்பட்டிணம் கலெக்டர் ஜெயராமன் நெல்லை கலெக்டராக நியமிக்கப்பட்டார். நேற்று நெல்லை வந்த அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பழனியாண்டி பொறுப்புகளை ஒப்படைத்தார்.
1989ம் ஆண்டு தென்காசி ஆர்டிஓவாக பணியாற்றிய ஜெயராமன் பின்னர் மன்னார்குடி, கடலூர், ஆர்டிஓவாகவும், கடலூர் மாவட்ட வழங்கல் அதிகாரியாகவும், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் சிறப்பு துணை கலெக்டராகவும் (நில எடுப்பு) தாஞ்சாவூர், சுனாமி மறுவாழ்வு சிறப்பு பணி ஆகிய பதவிகளில் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றியவர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கோவை முதுநிலை மண்டல மேலாளர், மோகனூர் சர்க்கரை ஆலை முதன்மை நிர்வாக அலுவலர், சேலம் மாநகராட்சி கமிஷனராகவும் பணியாற்றினார்.
இந்நிலையில் கடந்த 2001ம் ஆண்டு இவருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டது.
இன்று நெல்லை கலெக்டராகப் பதவியேற்ற பின் நிருபர்களிடம் பேசிய அவர், தாமிரபரணி ஆற்றில் முறைகேடாக மணல் அள்ளுவது தடுக்கப்படும். அரசு குவாரிகளிலும் மணல் அள்ளுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications