மீண்டும் துவங்கியது செங்கோட்டை - கேரளா பஸ் போக்குவரத்து
செங்கோட்டை: செங்கோட்டையில் இருந்து கேரளா மாநிலம் புனலூருக்கு சுமார் 6 மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பஸ் போக்குவரத்து துவங்கியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 208ல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து கடந்த 6 மாதங்களாக செங்கோட்டையில் இருந்து புனலூருக்கு போக்குவரத்து மூடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி முதல் கேரள பேருந்துகளும், 3ம் தேதி முதல் தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளும் இயங்க தொடங்கியுள்ளன.
தமிழக விரைவு போக்குவரத்து கழகம் பழைய பேருந்துகளை மாற்றி விட்டு புதிய பேருந்துகளை கடந்த நான்கு நாட்களாக சாதாரண கட்டணத்தில் இயக்கி வருகிறது.
கேரள மாநிலம் கொல்லம் செல்லும் பேருந்துகள் செங்கோட்டையிலிருந்து காலை 7 மணி, 9 மணி, மதியம் 3 மணி ஆகிய நேரங்களிலும், சுரண்டை-கொல்லம் பேருந்து செங்கோட்டையிலிருந்து காலை 10 மணிக்கும் இயக்கப்படுகிறது.
இதுதவிர செங்கோட்டையிலிருந்து ஆலப்புழைக்கு காலை 9 மணிக்கும், எர்ணாகுளத்திற்கு காலை 11, இரவு 11.30 மணிக்கும், திருநெல்வேலியிலிருந்து எர்ணாகுளம் காலை 11.30 மணிக்கும், கடையநல்லூர்-திருவனந்தபுரம் காலை 8.30 மணிக்கும், வேளாங்கண்ணி-கொல்லம் மதியம் 12.30 மணிக்கும், சென்னை-பத்தனம்திட்டா காலை 6-30 மணிக்கும், திருச்செந்தூர்-குருவாயூர் இரவு 9 மணிக்கும் இயக்கப்படுகிறது.
இது தவிர கேரள மாநில போக்குவரத்து கழகம் சார்பில் தென்காசியில் இருந்து செங்கோட்டை வழியாக கொல்லம், திருவனந்தபுரம், கோட்டயம், ஆலப்புழா, சங்கனாச்சேரி, பத்தணம்திட்டா ஆகிய இடங்களுக்கும், புதிதாக தென்காசியிலிருந்து தொடுபுழாவிற்கு செங்கோட்டை, கஞ்சிராப்பள்ளி, ஈரோட்டுபேட்டா பலாமார்க்கத்தில் 2 பேரூந்துகளும் இயக்கப்படுகின்றன.
தென்காசி-செங்கோட்டை-கொல்லம் வழியாக காயம்குளத்திற்கு 2 பேருந்துகளும், தென்காசி-செங்கோட்டை-ஆடூர் வழியாக காயம்குளத்திற்கு 2 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இது தவிர தமிழக அரசு போக்குவரத்து கழகம் தூத்துக்குடி-கொல்லம் மார்க்கத்தில் ஒரு பேருந்தை இயக்குகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications