போலி மருந்து: இந்தியாவின் பெயரில் சீனா செய்த தில்லுமுல்லு அம்பலம்!

கடந்த பல ஆண்டுகளாகவே, ஆப்பிரிக்க நாடுகளில் போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மருந்துகளில் 'இந்தியாவில் தயாரிக்கப்பட்டது (Made in India)' என்ற முத்திரை அச்சடிக்கப்பட்டிருந்ததால், இதுவரை இந்த படுபாதகத்தை இந்தியாவே செய்து வருவதாக உலக நாடுகள் பல குற்றம் சாட்டி வந்தன.
ஆனால் கடந்த வாரம் நைஜீரியா அரசின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஏஜென்ஸி ஒரு அறிக்கை வெளியிட்டது. இந்த மருந்துகள் அனைத்துமே சீனாவில் தயாரானவைதான் என்றும், அங்கிருந்துதான் இவை ஏற்றுமதியாகி வருகின்றன என்ற உண்மை இப்போது தெரிய வந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் நைஜீரியா அரசு தெரிவித்துள்ளது.
இந்த விஷயத்தில் உடனடியாக தனது கண்டனத்தை சீனாவுக்குத் தெரிவித்துள்ள இந்தியா, சீனாவின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்துடனும் பேச்சு நடத்தியுள்ளது.
மருந்துப் பொருள்களுக்கு நைஜீரியா நாடும் பிற ஆப்ரிக்க நாடுகளில் பெரும்பாலானவையும் முழுக்க முழுக்க வெளிநாடுகளையே நம்பியுள்ளன. இவற்றின் 60 சதவிகித மருந்துப் பொருள் தேவையை நிறைவேற்றுபவை இந்தியாவும் சீனாவும் மட்டுமே. ஆனால் இந்திய - சீன நிறுவனங்கள் தங்களுக்கு தரமான மருந்துகளைத் தருவதில்லை என நைஜீரியா பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வந்தது.
சமீபத்தில் போலி மருந்துகள் சப்ளை செய்ததாக 30 இந்திய மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களை தடைசெய்துவிட்டது நைஜீரியா அரசு.
இந்த நிலையில், மற்ற ஆப்ரிக்க நாடுகள் பலவற்றிலிருந்தும் இந்தியாவின் தயாரிப்பாக வரும் அனைத்து மருந்துகளும் போலியானவையாக உள்ளன என புகார் கூறப்பட்டது. உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் பெயரைக் கெடுக்கவும், சர்வதேச வர்த்தகத்தை முடக்கவும் சில நாடுகள் சதி செய்வதாக இந்தியா புகார் கூறி வந்தது.
இந்த நிலையில் நைஜீரியா அரசு அமைப்பே, இந்த மருந்துகளைத் தயாரித்து அனுப்பியது சீனாவே என்றும், அதில் வேண்டுமென்றே இந்தியாவின் லேபிளை ஒட்டி சதி செய்திருப்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது.
இந்த விவரங்களை உடனடியாக உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) போன்றவற்றிடமும் சமர்ப்பித்துள்ளது இந்தியா.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications