For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமநாதபுரம் குடிநீர்த் திட்டம்: நாளை தொடக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் நாளை முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்படுகிறது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் சென்னையிலிருந்தபடி திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் முதல்வர்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

முதல்-அமைச்சர் கருணாநிதி நாளை (11.6.2009) காலை 9.30 மணியளவில் தலைமைச் செயலகத்திலிருந்து மின் ஊடக தொலைத்தொடர்பு (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.

ராமநாதபுரத்தில் நடைபெறும் விழாவில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அரசு நலத்திட்டங்களை வழங்கி விழா பேருரையாற்றுகிறார்.

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் குடிநீர் வசதியை ஏற்படுத்தும் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு முதல்-அமைச்சர் கருணாநிதியால் கடந்த 30.1.2007 அன்று ராமநாதபுரம் மாவட்டம்- பரமக்குடி, ராஜா சேதுபதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இத்திட்டம் ரூ. 616 கோடி மதிப்பில், 5 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 18 ஊராட்சி ஒன்றியங்கள், 3163 ஊரக குடியிருப்புகளில் உள்ள மொத்தம் 20 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பணிகள் 2 ஆண்டு 5 மாதங்களில் முடிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X