தீவிரவாத தாக்குதல் சொதப்பல் எதிரொலி- மும்பை கமிஷனர் அதரடி மாற்றம்
டெல்லி: மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய வெறித் தாக்குதலின்போது திறம்பட செயல்படத் தவறியதற்காக மும்பை மாநகர காவல்துறை ஆணையர் ஹசன் கபூர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.
மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைப் பார்த்து உலகமே அதிர்ச்சியில் உறைந்து போனது.
இந்த பரபரப்புச் சம்பவத்தின்போது போலீஸ் நடவடிக்கை குறித்து விசாரிக்க ராம் பிரதான் கமிட்டி நியமிக்கப்பட்டது. இந்த கமிட்டி அளித்த அறிக்கையில், காவல்துறை ஆணையர் கபூரின் செயல்பாடுகள் படுமோசமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ஒரு திறமையான காவல்படையின் தலைவராக கபூர் செயல்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று கபூர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவரை மகாராஷ்டிர காவல்துறை வீட்டு வசதிப் பிரிவு இயக்குநராக அரசு நியமித்துள்ளது.
இணை ஆணையர் கே.எல். பிரசாத், ஆணையர் பொறுப்பை தற்காலிகமாக கூடுதலாக வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் நடந்த அனைத்து இடங்களுக்கும் கபூர் செல்லவில்லை. மேலும் தேவையான அளவுக்கு போலீஸ் படையினரை அனுப்பவும் அவர் துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய 3 நாட்களும், ஹோட்டல் டிரைடென்ட் ஓபராய் ஹோட்டலுக்கு வெளியேயே அவர் முகாமிட்டிருந்தார்.
சக அதிகாரிகளுடன் அவர் சரிவர தொடர்பு கொள்ளவில்லை. ஆணையர் அலுவலகத்திற்கு அடிக்கடி போகவில்லை. சரியான திட்டமிடலை அவர் மேற்கொள்ளவில்லை. மொத்தத்தில் படு மெத்தனமாக அவர் நடந்து கொண்டார் என கமிட்டி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
-
இந்தியர்கள் 3 நாடுகளுக்கு செல்ல அதிரடி தடை.. அறிவித்த மத்திய அரசு.. பின்னணியில் ‘எபோலா' நோய்த்தொற்று -
சீனாவில் இருந்தபடி ஹைதராபாத்தில் ஆபரேஷன்! 3,000 கிமீ தொலைவில் ரோபோவை கண்ட்ரோல் செய்த இந்திய டாக்டர் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு பின்னணியில் பாகிஸ்தான்? முடக்கப்பட்ட பக்கங்கள்.. அடுத்து திடீர் விளக்கம் -
92% மார்க் எடுத்த பிறகும் நேர்ந்த சோகம்! நீட் ரத்தால் கர்நாடக மாணவி விபரீதம்.. கண்ணீரில் பெற்றோர் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்!












Click it and Unblock the Notifications