இலங்கை முகாம்களில் 30 தமிழர்கள் பட்டினிக்கு சாவு
கொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருந்த 30 தமிழர்கள் உணவின்றி பட்டினியால் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லி கொண்டு இலங்கை ராணுவம் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது. மேலும், கடைசிக்கட்ட போரில் ஒரிரு நாட்களில் சுமார் 20 ஆயிரம் தமிழர்களை கொன்று இனப்படுகொலை அரங்கேற்றியது.
தற்போது போர் முடிந்த நிலையில் அப்பாவி தமிழர்கள் சுமார் 3 லட்சம் பேர் அங்கிருக்கும் ஒரு சில கூடாரங்களுக்குள் முண்டியடித்து வாழ்கின்றனர். அவர்களுக்கு மருந்து, உணவு போன்ற அடிப்படை வசதிகளை இலங்கை அரசு செய்ய மறுத்துவருகிறது.
மேலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்களுடன் வந்த வணங்கா மண் என்ற கப்பலையும் இலங்கை ராணுவம் சோதனை என்ற பெயரில் தடுத்து நிறுத்தியது.
இந்நிலையில் கொழும்புவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனர் பாக்கியசோதி சரவணமுத்து என்பவர் இலங்கை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
40 முகாம்களில் 3லட்சம் பேர்...
அதில்,
வடக்கில் வவுனியா, மன்னார், திரிகோணாமலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 முகாம்களில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் அகதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாம்களில் இதுவரை 30 பேர் பட்டினி காரணமாக மரணமடைந்திருப்பதாக வவுனியா கலெக்டர் உறுதி செய்துள்ளார்.
முகாம்களில் சுகாதார வசதி கொஞ்சமும் இல்லை. அவர்களுக்கு மருத்துவ வசதியும் கிடைக்கவில்லை.
இந்த முகாம்கள் சிறைசாலையை விட கொடியதாக இருக்கிறது. தமிழர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நோகடிக்கும் வகையில் இந்த முகாம்கள் நிர்வகிக்கப்படுகின்றன.
இதில் அப்பகுதியை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் அடைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications